பாட வந்தவரை விரட்டினார்கள், படத்தில் நடிக்கிறார். என்ன செய்வார்கள்?

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கஜல் பாடகர் குலாம் அலி, இந்திய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஸுஹைப் இல்யாசி இயக்கத்தில் "கர் வாப்சி" எனும் படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தைத் தொடங்க உள்ளார் குலாம் அலி.

தனது இனிமையான குரலின் உலகம் முழுவதிலும் ரசிகர்களைக் கொண்டுள்ள குலாம் அலியின் நிகழ்ச்சி சென்ற வருடம் மும்பையில் நடைபெற இருந்து, சிவசேனாவின் பயமுறுத்தலால் நிறுத்தப்பட்டு பின்னர் சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.தற்போது குலாம்அலி இந்தித் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் நடித்து வரும் படத்தில் தனது பகுதிக்கு டப்பிங் கொடுக்க வந்த குலாம் அலி பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டார். அப்போது நடிப்பை விட பாடுவது சுலபம் என்று தான் நினைப்பதாக கூறினார். இப்படத்தில் தனது குரலிலேயே இந்திய நாட்டுப்பற்று பாடலையும் பாடியுள்ளார் அலி.

இப்படத்தின் இசை வெளியிடு ஜனவரி 29ம் தேதி நடைபெற உள்ளது, இதில் குலாம் அலி கலந்து கொள்கிறார். இதைப்பற்றி இப்படத்தின் இயக்குனர் இல்யாசி கூறுகையில், இசை வெளியிட்டு விழா எந்த ஒரு இடையூறும் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் என்று நான் நம்புகிறேன் என்றும், மேலும் இந்திய, பாகிஸ்தான் உறவு மேம்பட்டு வருவதாகவும் கூறினார்.

- பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!