இணையத்தைக் கலக்கும் ஷில்பா ஷெட்டியின் வீடியோ!

ஒரு காலத்தில் அதீத சர்ச்சைகளில் அடிப்பட்டு வந்த ஷில்பா ஷெட்டி கொஞ்ச நாட்களாகக் குடும்பம் குழந்தை என ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் இணையவெளியில் ஷில்பாவின் அட்ராசிட்டிகள் ஆரம்பம். மும்பையில் இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடக்கவிருக்கும் யோகா ஷிவிரில் பாபா ராம்தேவுடன் கலந்துகொண்டுள்ளார் ஷில்பா.

பெரிய அளவிலான கூட்டம் கூடியுள்ள மேடையில் பாபா ராம்தேவுடன் ஷில்பா ஷெட்டி தோன்றி யோகா செய்துள்ளார். பாபாவுடன் ஷில்பா இணைந்து யோகாசனம் செய்ய, அந்த வீடியோக்கள் தற்போது யூடியூப் துவங்கி வாட்சப் வரை அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இருவரின் யோகா புகைப்படங்களைக் கொண்டு நெட்டிசன்கள் மீம்ஸ்கள் எனப்படும் புகைப்பட கமெண்டுகளை தீவிரமாக பகிர்ந்து வருகிறார்கள்.

பாபா, ஷில்பாவின் யோகா போஸ்களுக்கு ஏற்றவாறு கமெண்டுகளை சேர்த்து பகிர ஒவ்வொரு மீம்ஸும் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன.

பிரிக்க முடியாதது என்னவோ ஷில்பாவும், யோகாவும் பாணியில் ஏற்கனவே யோகா குருவுடன் தனது 40வது பிறந்தநாளில் தோன்றி சமூக வலைகளை பரபரப்பாக்கினார். இப்போது மீண்டும் ஷில்பா யோகா என ட்ரெண்டாகும் அளவிற்கு இணையம் பற்றிக்கொண்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!