சன்னி லியோன் குறித்து அமீர்கான் ஓபன் ஸ்டேட்மெண்ட்

"சன்னி லியோனுடன் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, மகிழ்ச்சியே" என்று அமீர் கான் வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி சன்னி லியோனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி என்ற பெயரில் சன்னி லியோனிடம் அநாகரிகமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலரும், சன்னி லியோனுக்கு ஆதரவு தெரிவித்தும், அத்தொகுப்பாளருக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தும் வந்தனர்.

இது சமூகவலைத்தளங்கள், மீடியாக்கள் என அனைத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பேட்டியில் நீங்கள் அமீர்கானுடன் பணியாற்ற விரும்புவீர்கள், அமீர்கான் உங்களுடன் பணியாற்ற விரும்புவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மிகவும் பொறுமையுடனும், நிதானமாகவும் என்னுடன் நடிக்கவில்லை என்பதற்காக அவருடைய ரசிகை இல்லை என்றாகிவிடாது. அவரது படங்களை நான் தொடர்ந்து பார்ப்பேன். என் ஆதரவுகளை அவருக்குக் கொடுப்பேன் என்றார். 

தற்போது இதுகுறித்து அமீர்கானே தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ளார், " சன்னி உங்களது கடந்த காலத்தைப் பற்றி எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் உங்களுடன் நடிப்பதில், எனக்கு மகிழ்ச்சியே" என்று டிவிட் செய்து சன்னிலியோனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு அமீர்கானிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சன்னி லியோன், அவரை மதிப்பதாகவும் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் பல பிரபலங்கள் சன்னி லியோனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சன்னி லியோன் விரைவில் வெளிவர இருக்கும் மஸ்திஜாடே படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் பிசியாக உள்ளார், இப்படம் கிளாமர் காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!