குடித்துவிட்டு ரகளை செய்த நடிகர் மாதவன் -வீடியோ இணைப்பு | The Drunk Khadoos, Madhavan drunk on shooting spot

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (22/01/2016)

கடைசி தொடர்பு:15:41 (22/01/2016)

குடித்துவிட்டு ரகளை செய்த நடிகர் மாதவன் -வீடியோ இணைப்பு

சாலா காதூஸ் படப்பிடிப்பில், குடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது உண்மையில் குடித்த மாதவனுக்கு விளையாட்டு விபரீதமாகியிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் ஜனவரி 29ம் தேதி இந்தி மற்றும் தமிழில் வெளியாக உள்ள திரைப்படம் சாலா காதூஸ், தமிழில் "இறுதிச்சுற்று".

இப்படம் மாதவன் ரசிகர்களிடையே அதிக எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகி கொண்டிருக்கும் அனைத்து படங்களிலும் ஹீரோக்கள் குடிப்பது போன்று காட்சி இல்லாமல் படம் வெளியானால் அது ஆச்சரியமே, இப்படத்திலும் அப்படி ஒரு காட்சி படமாக்கப்பட்ட போது உண்மையாகவே மது அருந்தியுள்ளார் மாதவன்.

அந்த குறிப்பிட்ட காட்சியை நடிப்பதில் சிரமமாக உணர்ந்த மாதவன், உண்மையில் மது அருந்திவிட்டு நடித்தால், தத்ரூபமாக இருக்கும் என நினைத்து சிறிது குடித்துள்ளார். பிறகு காட்சி சரியாக வராததால், டேக் அதிகம் போக மாதவனும் கொஞ்சம் மதுவை அதிகம் குடிக்க சொதப்பல். மாதவன் தன்னிலையை இழந்து, படப்பிடிப்புத் தளத்தில் தள்ளாடும் வீடியோவை அதிகாரப்பூர்வமாகவே வெளியிட்டுள்ளனர்.மேலும் ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி இயக்குநரிடம் நக்கல், நாசரை அடிப்பது என மாதவன் அலப்பறை கொடுத்துள்ளார். 

இதில் மாதவன் உண்மையாகவே தான் மது அருந்துவதை கூறி இருப்பதோடு, தன் கடமை உணர்ச்சி, அளவு மீறிப் போனதையும் கூறியுள்ளார். மேலும் நான் இதை ஒரு தவறான அனுபவமாக உணர்கிறேன்  என்றும் குடிப்பது தவறு எனவும் கூறியுள்ளார். 

  உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மேடி! 

வீடியோவுக்கு:

-பிரியாவாசு-

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close