ஜெனிலியாவுக்கு இப்படி ஒரு சங்கடமா?

பிரபல பத்திரிகை ஒன்று தந்தையின் பெயரை தவறாகப் பதிவு செய்ய, நான் தான் குழந்தையின் தந்தை என தெளிவுபடுத்தியுள்ளார் நடிகை ஜெனிலியாவின் கணவர். பாலிவுட் நடிகர் ரித்தேஷ் மற்றும் நடிகை ஜெனிலியா இருவரும் பிப்ரவரி 2012ம் வருடம் திருமணம் செய்துகொண்டனர்.  இவர்களுக்கு 2014ல் ரியான் எனும் ஆண் குழந்தைக்கு பிறந்தது.

குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் அவ்வப்போது தம்பதியர்கள் பதிவு செய்வதுண்டு. அது போல் குடியரசு தினத்தன்று, நமது தேசியக் கொடியின் வண்ணங்களில் ஆடை அணிந்திருந்த, தனது மகனின் புகைப்படத்தை ஜெனிலியா, ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய, அதனை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் பகிர்ந்திருந்தார்.

இந்தப்புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த பிரபல பத்திரிகை ஒன்று ரித்திஷ் தேஷ்முக்கிற்கு பதிலாக ரித்தேஷ் சித்வானி என தவறுதலாகப டேக்கிட்டு குறிப்பிட்டிருந்தது. இதனைக் கண்ட ரித்தேஷ், "அவர் ரித்தேஷ் சித்வானி அல்ல ஜெனிலியாவின் மகன் ரியானின் தந்தை நான் தான் என ட்வீட் செய்துள்ளார். அதன்பின் அப்பத்திரிகையின் தவறு சரிசெய்யப்பட்டது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!