மைக்கேல் ஜாக்சன் கேரக்டரில் இவரா? | Nawazuddin Siddiqui to act as Michael Jackson

வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (30/01/2016)

கடைசி தொடர்பு:15:25 (30/01/2016)

மைக்கேல் ஜாக்சன் கேரக்டரில் இவரா?

சல்மான் கானை அடுத்து ஷாருக்கானுடன் இணைகிறார் பஜ்ரங்கி பைஜான் புகழ் நவாசுதின் சித்திக். பாலிவுட்டில் உள்ள நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் நவாசுதின் சித்திக். பல வருடங்களாக இவர் பாலிவுட்டில் நடித்துவந்தாலும் இவருக்கு என தனி அடையாளத்தை கொடுத்த படம் அமீர் கான் நடிப்பில் 2010ல் வெளிவந்த பீப்ளி லைவ். அதன் பின்னர் சல்மான் கான்னுடன் கிக், பஜ்ரங்கி பைஜான் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

முன்னதாக இரண்டு கான்களுடன் நடித்த சித்திக் தற்போது ஷாருக்கானுடனும் இணைந்துள்ளார். அதுவும் மைக்கேல் ஜாக்சன் வேடத்தில். ராகுல் தோலக்கியா இயக்கத்தில் ஷாருக் தற்போது நடித்து வரும் படம் "ராயீஸ்". ஷாருக் இப்படத்தில் தனது இயல்பான, காதல் நாயகன் தோற்றத்தை விடுத்து, குஜராத்தியாக மாறியுள்ளார். இப்படத்தில் சித்திக், ஒரு காட்சியில் மைக்கேல் ஜாக்சன் வேடத்தில் உள்ள போலீஸாக நடித்திருப்பதோடு, அவரைப் போல் ஆடவும் செய்துள்ளாராம்.

 ராயீஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், ஷாருக்கின் வித்தியாசமான நடிப்பையும் எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் இவ்வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கானின் சுல்தானும், ராயீஸும் ஒன்றாக திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ஷாருக் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஃபென் படம் ஏப்ரல் 16 வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close