ராம்போ ரீமேக்கில் நடிக்க இந்தியாவில் நடிகர்களே இல்லையா?

பிரபல ஹாலிவுட் படமான "ராம்போ" படத்தினை பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருக்கிறார் "பேங் பேங்" இயக்குநர் சித்தார்த் ஆனந்த்.  ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலொன் நடிப்பில் உலகப்புகழ் பெற்ற படம் "ராம்போ". இப்படம் 1982 முதல் 2008 வரை நான்கு பகுதிகளாக வெளிவந்தது.

டேவிட் மொரேலின், ஃபர்ஸ்ட் பிளட் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலொன், ஜான் ராம்போ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தை, ஹ்ருத்திக் ரோஷனை வைத்து "பேங் பேங்" படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த், இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக டாம் க்ரூஸ் நடிப்பில் உருவான "நைட் அண்ட் டே" படத்தை இந்தியில் "பேங் பேங்"காக தந்தார். எனினும் படம் சரியான அளவில் போகவில்லை.. இப்படத்திலும் ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பாரா என்ற கேள்விக்கு, இப்படத்திற்காக ஹ்ருத்திக் தான் எனது முதல் தேர்வு என்ற போதிலும் புதிய நாயகனைத் தேடி வருவதாக கூறியுள்ளார்.

சில்வஸ்டர் ஸ்டாலொன் ராம்போ யுனிவெர்ஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இச்சமயத்தில் இப்படத்தினை இங்கு ரீமேக் செய்வது சிறப்பானதாக அமையும், இப்படத்தின் அதிகாரப்பூர்வ உரிமத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே வாங்கிவிட்ட போதிலும், இந்திய ரசிகர்களுக்கு ஏற்றபடி இப்படத்தை எடுக்க ஏற்பாடுகள் செய்துவருகிறோம்,

மேலும் இங்கு சில்வஸ்டர் ஸ்டாலொன் மற்றும் ஆர்னால்ட் ஸ்வஸ்நேகர் போன்ற தோற்றமுள்ள, முழு நீளஆக்ஷன் ஹீரோக்கள் யாரும் இல்லை, ரசிகர்களுக்கு அவர்களது உண்மையான, மனதில் பதிந்த ராம்போவைக் கொடுப்பது தான் எங்கள் நோக்கம் என இயக்குநர் கூறியுள்ளார்.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!