ஐதராபாத் முனிசிபல் எலெக்‌ஷனில் ஓட்டுப்போட வந்த சல்மான்கான்-அதிர்ச்சியில் ஆந்திரா

ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாளஅட்டையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் புகைப்படம் இருக்கவே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஹைதராபாத் தேர்தல் ஊழியர்கள். குறிப்பிட்ட அந்த வாக்காளர் அடையாள அட்டையில் சல்மான் கானின் பெயர் மற்றும் அவரது புகைப்படம், அவரது தந்தையின் பெயர் சலீம்கான் என்பது வரை சரியாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் உள்ள ஒரே வித்தியாசம், அவரது வயது 64 என குறிப்பிட்டுள்ளது மட்டும் தானாம். சல்மான் கான் தனது 50வது பிறந்தநாளை சமீபத்தில் தான் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தலில், அதிகாரப்பூர்வமாக தனக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையோடு ஓட்டுப் போட வந்த அந்த நபரின் அட்டையை சரிபார்த்த ஊழியர்கள், சல்மான்கானின் புகைப்படம் அதில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும் ஹைதரபாத் வாக்காளர் அட்டையில் சல்மான்கான் ஏன் இடம்பிடித்தார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. 

பின் அவருக்கு ஓட்டுப்போட தடை விதிக்கபட்டிருக்கிறது. மேலும் அவர் மீது சந்தேகமும் எழுந்துள்ள நிலையில் விசாரித்து வருகிறார்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர்கள், புகைப்படங்கள் மாற்றி இடம் பெறுவது புதிய விஷயம் இல்லை என்றாலும், ஒரு நடிகரின் பெயரும், புகைப்படமும் மாற்றி இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என வாக்காளர் அட்டை சோதனைச் சாவடி அதிகாரி சையத் ஹைதர் கூறியுள்ளார்.

-பிரியாவாசு -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!