வைரலான ஓரினச்சேர்க்கையாளர் டிரெய்லர்...வெளியாகுமா படம்?

ஓரினச்சேர்கையாளர் பற்றிய படம் "அலிகர்ஹ்" டிரைலர், யூடியுபில் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது. ஹன்சல் மெஹ்தா இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 28ம் தேதி வெளியாகியது.

அலிகர்ஹ் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஓரினச்சேர்கையாளர்  டாக்டர் ஸ்ரீநிவாஸ் ராமசந்ரா சிராஸின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படமே "அலிகர்ஹ்". ஓரினச்சேர்கையாளராக இருந்தமைக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட விரிவுரையாளர் வேடத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைக் குவித்துள்ளது.

தற்போது இப்படத்தின் டிரெய்லர் 15 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார். இந்தியாவில் இப்படத்தின் டிரெய்லருக்கு ஏ சான்றிதழ் அளித்த தணிக்கை குழுவை இயக்குநர் மெஹ்தா கடுமையாகச் சாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 26ம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. சமூதாய அளவில் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இந்தப் படம் பெரிதும் ஆதரவாக இருக்கும் எனவும் பலரும் சமூக வலைகளில் இந்தப் படத்திற்கு ஆதரவுகளைக் குவித்து வருகிறார்கள். 

இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக நீதிமன்றம் இப்படத்தைப் பார்க்க வேண்டும் எனவும் மேலும் இயற்கைக்கு மாறான கதையைச் சொல்லி பொதுமக்களை திசை திருப்பும்படி  இருக்கிறதா என ஆராய முடிவு செய்துள்ளனர்.

ஒருவேளை படம் இயற்கைக்கு மாறாக அமைந்திருப்பின் செக்‌ஷன் 377ன் படி படத்திற்கு தடை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. 

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!