பிரபல பாடகரால் விமானப் பணிப்பெண்களுக்கு சிக்கல்!

இந்தியாவின் முன்னணி பாடகர்களுள் ஒருவரான சோனு நிகம், விமானத்தில் பாட்டுப் பாடியதால், விமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தி, கன்னடம், அஸ்ஸாமி, பெங்காலி, ஓடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், உருது, நேபாளி, மலையாளம், மராத்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார் சோனு நிகம்.

இந்தியாவில் மிக அதிகச் சம்பளம் பெறும் பாடகர்களுள் ஒருவரான இவர் தமிழில் ஜீன்ஸ் "வாராயோ தோழி, கிரீடம் "விழியில் உன் விழியில்", மதராசபட்டினம் "ஆருயிரே",உள்ளிட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர், சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த போது, "வீர் ஜாரா" மற்றும் "ரெஃபியுஜ்" போன்ற படங்களிலிருந்து தான் பாடிய பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.

 இதனால் ஜெட் ஏர்வேஸ் அப்போது பணியில் இருந்த 5 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. சோனு நிகம் இது தான் உண்மையான சகிப்புத்தன்மையின்மை என விமர்சித்துள்ளார். விமானத்தில் பயணியை பாட்டு பாடவிட்டதற்காக விமானப் பணிப்பெண்களைப் பணி நீக்கம் செய்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை, கிண்டல் செய்து பலரும் ட்விட்டர் வலைதளத்தில் பதிவுகள் இட்டு வருகிறார்கள்.

பாடுவது மனிதனின் சுதந்திரம், மேலும் அங்குள்ள மக்கள் யாரும் அதை இடையூறாகக் கருதாத நிலையில் இதற்காகப் பணி நீக்கம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். சிலர் இதற்கு ஆதரவுகளையும் குவித்து வருகிறார்கள். காரணம் விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியம். இப்படி பாடிக்கொண்டிருந்தார் மற்ற பயணிகளின் பிரைவஸி பாதிக்கக் கூடும். சில தன்னிலை மறந்து நடனம் ஆடினாலும் ஆபத்து தானே எனவும் கூறியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!