அந்தரத்தில் நடனம் ஆடிய ஆஷிக்2 நாயகி...வியப்பில் ஆழ்த்திய விளம்பர ஷூட்!

சமீபத்தில் ஆஷிக் 2 படத்தின் மூலம் இந்தியா முழுவதும் ஹிட்டான நாயகி ஷ்ரதா கபூர் சமீபத்தில் ஒரு விளம்பரத்தின் புரமோஷனுக்காக அந்தரத்தில் நடனம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார், டீன் பட்டி படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த ஷ்ரதா தொடர்ச்சியாக ஆஷிக் 2, கோரி தேரி பியார் மெய்ன், ஏக் வில்லன், ஹைதர், ஏபிசிடி2, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் ஆஷிக் 2 படம் மூலம் இந்தியா முழுவதும் மெகா பிரபலம் ஆனார். இந்தியாவின் முன்னணி கம்பெனிகள் மற்றும் மேக் அப் சாதனங்களுக்கு விளம்பரத் தூதராக இருக்கும் ஷ்ரதா சமீபத்தில் லேக்மே அறிமுகப்படுத்திய லைட் வெயிட் மேக்கப் அறிமுகத்தில் வானுயர கட்டிடத்தில் கயிற்றில் தொங்கியதும் மட்டுமின்றி காற்றில் அழகிய நடனம் ஆடியுள்ளார் ஷ்ரதா.

இந்தப் விளம்பரப் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவரும் ஷ்ரதாவின் தைரியத்தை வெகுவாகப் பாராட்டினார்கள். ஷ்ரதாவுடன் அந்தரத்தில் நடனம் ஆடும் பயிற்சி பெற்ற மூன்று பெண்களும் பங்கேற்றனர். எனக்கு மேக்கப் போட்டதே தெரியாதது போல் மேக்கப் போட மிகவும் பிடிக்கும். அந்த வகையில் லேக்மேவின் இந்த புராடெக்ட் அருமையான அறிமுகம், எனக்கு சந்தோஷமான, மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது இந்த அந்தரத்தில் நடனம் ஆடியது எனவும் பகிர்ந்துள்ளார் ஷ்ரதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!