கோவிலில் நின்று சன்னிலியோன் செய்த வேலையால் வந்த வினை | Complaint against Sunny Leone for hurting religious sentiments

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (11/02/2016)

கடைசி தொடர்பு:15:22 (11/02/2016)

கோவிலில் நின்று சன்னிலியோன் செய்த வேலையால் வந்த வினை

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன். இவர் நடித்த படங்களினால் சர்ச்சையில் சிக்கி, போலீஸ் வழக்குகளையும் சந்தித்துவரும் சன்னிலியோன் மீண்டும் ஒரு வழக்கில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் துஷார் கபூர், வீர்தாஸ் ஆகியோருடன் இவர் நடித்து வெளியான  இந்தித் திரைப்படம் “மஜ்தி ஜாதே”. இப்படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவ்ரவ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

மேலும் கோவிலில் நின்று சன்னிலியோனும், வீரதாஸூம் ஆணுறை விளம்பரம் செய்வது போன்ற காட்சியில் நடித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, சன்னிலியோனின் ஆபாசப் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பரவிவருவதாகவும், அதனைக் கண்டித்து மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்திய பண்பாட்டுக்கு எதிராக சன்னிலியோன் செயல்படுகிறார் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரு வழக்குகளையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close