விசாரணை படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான படம் விசாரணை. பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவே பெருமைப் படும் அளவிற்கு ஒரு படமெனில் அது விசாரணை படமாகத்தான் இருக்கும்.

படத்திற்கு வெனிஸ் திரைப்பட விருது மட்டுமின்றி உலகின் மிகச்சிறந்த படங்களில் விசாரணை படமும் ஒன்று எனும் அளவிற்கு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் படத்திற்கு அடுத்த சிறப்பாக இந்தியில் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

எந்திரன் 2.ஓ படத்தின் வில்லனும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான அக்‌ஷய் குமார் விசாரணை படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் ஆர்வத்தில் உள்ளார். மேலும் இயக்குநர் பிரியதர்ஷன் படத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்தது மட்டுமின்றி அக்‌ஷய் குமாருடன் ரீமேக் பேச்சுவார்த்தையும் நடத்தியதில் அக்‌ஷய் குமாருக்கும் இதில் விருப்பம் இருக்கவே படம் பாலிவுட்டிற்கும் பயணிக்கவிருக்கிறது. ஏற்கனவே ‘துப்பாக்கி’, ‘ரமணா’ என தமிழ் படங்கள் ரீமேக்கில் அக்‌ஷய் குமார் ஆர்வம் காட்டியதும் அப்படங்கள் பாலிவுட்டில் உருவாகி பெருமளவில் வசூல் சாதனை படைத்ததும் நாமறிந்ததே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!