அடுத்தடுத்து மூன்று கான்கள் படம்...எந்தப் படம் ஜெயிக்கும்?

பாலிவுட்டை பொறுத்த மட்டில், இந்த வருடம் ரசிகர்களுக்கு செம விருந்து. ஏனெனில் பாலிவுட்டின் மூன்று கான்களின் படங்களும் இவ்வருடம் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் ஷாருக் கான் நடிப்பில் ஃபேன் மற்றும் ராயிஸ், இரண்டு படங்கள் வெளிவர உள்ளன. வெவ்வேறு கதை அம்சங்களைக் கொண்ட இவ்விரண்டு படங்களின் டீசர்களும் ரசிகர்களைப் பெரும் அளவு கவர்ந்துள்ளது.

குறிப்பாக ராயிஸ் படத்திற்கு முன்னதாகவே வெளியாக இருக்கும் ஃபேன் படத்தின் இரண்டு டீசர்களும் இப்படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இன்னும் வெளியாகாத நிலையில், படத்தின் முதல் பாடலை நாளை வெளியிடுகின்றனர் படக்குழுவினர்.

ஃபேன் படத்தில் இடம் பெற்றுள்ள முதல் மற்றும் ஒரே பாடல் "மே தேரா ஃபேன் ஹோ கயா", இப்படத்தின் டைட்டில் பாடல் எனவும் கூறப்படுகிறது. இப்பாடலின் சில பகுதிகள் சில வாரங்களுக்கு முன்னதாக வலைதளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது. யஷ் ராஜ் பிலிம்ஸ் இப்பாடலை நாளை எல்லா டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் வாயிலாகவும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 

அடுத்து அமீர்கானின் தங்கால், மற்றும் சல்மான்கானின் சுல்தான். இவ்விரு படங்களின் கதையும் பாக்ஸிங் சார்ந்த கதை. அதைவிட முக்கியம் இரண்டுமே இறுதிச்சுற்று பாணியில் ஒரு மாஸ்டர், ஒரு பெண் மாணவி சார்ந்த கதை என்பது தான் இதில் சிறப்பு. தாங்க் காட் என் படம் முன்னாடியே வந்துடுச்சு என மாதவனுக்கு சந்தோஷம் என்றாலும் அமீர்கான், சல்மான் கான் இடையில் ஒரு விரிசலே ஏற்பட்டுவிட்டது. பார்க்கலாம் மூன்று கான்களில் எந்தக் கானின் படம் கலக்கல் வசூல் அடிக்கப் போகிறது என்பதை. 

-பிரியாவாசு -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!