ஹாலிவுட் நாயகிகளுக்கே பீதி கொடுக்கும் தீபிகா படுகோனே!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், இனி இப்படிக் கூற முடியாது போல. அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் தீபிகா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வின் டீஸலுடன் ட்ரிப்பிள் எக்ஸ் படம் மூலம் தனது ஹாலிவுட் பயணத்தைத் தொடங்கியுள்ள தீபிகா, அவருடன் எடுத்த  புகைப் படங்களையும், வீடியோவையும் சமூக வலைதளங்களில் பகிர இணையமே தீபிகாவின் புகழ் பாடிக்கொண்டாடுகிறது.

தற்போது மீண்டும் தீபிகா தலைப்புச் செய்தியாகியுள்ளார், ஆனால் இம்முறை வின் டீஸல் கூட்டணிக்காக அல்ல, ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகனும், ஏஞ்சலினா ஜோலியின் கணவருமான பிராட் பிட்டுடன் இணைய உள்ளார் என்ற செய்தியால் தான். ஹாலிவுட்டிலேயே மிகுந்த செல்வாக்கும், சக்தி வாய்ந்தவராகவும் கருதப்படும் மனிதர்களுள் ஒருவர் ப்ராட் பிட்.

 

ஓசன்ஸ் லெவன், ட்ராய் , Mr&Mrs.. ஸ்மித், வேர்ல்ட் வார் போன்ற வெற்றிப் படங்களின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலமான பிராட்பிட்டுடன் நடிக்க, தீபிகா ஒப்பந்தமாகி உள்ளார் எனச் சொல்லப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் நடிகைகளே பிராட்பிட்டுடன் நடிக்க நான் நீ என போட்டி போட்டுக்கொண்டிருக்கையில், தீபிகாவுக்கு உண்மையிலையே இவ்வாய்ப்பு கிடைக்குமானால், நிச்சயம் பிரியங்கா சோப்ராவுக்கு மட்டுமல்ல ஹாலிவுட் நடிகைகளுக்கும் போட்டியாளர் தான். 

-பிரியாவாசு -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!