சன்னிலியோன் இப்படியும் நடிப்பார். வைரலாகும் புது வீடியோ

காமம், இறப்பு கலந்த ஓர் நாடகம் இதுவே சன்னிலியோன் நடித்து சமீபத்தில் வெளியாகி வைரல் ஹிட் அடித்துவரும் வீடியோ. யாரும் கற்பனைக் குதிரையை தட்டிவிட வேண்டாம். அந்த வீடியோ புகைபிடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வை ஏந்தி வருகிறது.

அந்த வீடியோ என்னன்னா,

வட இந்தியாவின் கிராமப்பகுதியில் இருக்கும் ஓர் இளைஞன். சீக்கிரம் இறந்துவிடுவார் என்று அந்த ஊர் மருத்துவர் சொல்லிவிடுகிறார். குடும்பத்தினர் அவனின் கடைசி ஆசை என்னவென்று கேட்கிறார்கள். அவன் தன்னுடைய செல்ஃபோனில் ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறான்.

அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணை வீட்டிற்கு அழைத்துவருகிறார். அந்தப் பொண்ணு வேற யாரு? சன்னிலியோன் தான். சன்னிலியோன் அவனின் அறைக்கு வந்து கதவையும் சாத்திகொள்கிறாள். அவனுக்கு பால் குடிக்கக் கொடுக்கிறாள். சன்னியைப் பார்த்து வழிந்து விழும் அவனுக்கு மூச்சு விடக் கூட முடியாத அளவுக்குக் காசநோய் வேறு. அதற்கடுத்து என்ன நடந்ததென்பதே இந்த வீடியோ.

மிக மோசமான கொடிய பழக்கங்களில் ஒன்று தான் புகைப்பழக்கம். அதற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு வீடியோவே “நோ ஸ்மோக்கிங்”. நாம் ஒவ்வொரு முறை புகைபிடிக்கும் போதும் நம்முடைய வாழ்வில் 11 நிமிடங்களை தொலைத்துக்கொண்டிருக்கிறோம்,  அடுத்தடுத்த சிகரெட்டை புகைக்கும் முன்பு சிந்தியுங்கள் என்ற கருத்துடன் வீடியோ முடிகிறது...

வீடியோவிற்கு:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!