நடிகர் ரிலீஸ்...இலவச சிக்கன் கறி கொடுக்கும் பிரபல ரெஸ்டாரண்ட்!

சட்டத்திற்கு புறம்பாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்தார். இந்நிலையில் பிப்ரவரி 25ம் தேதியான நாளை வெளியாக இருக்கிறார், தண்டனை காலத்துக்கு முன்பாகவே அவரது நன்னடத்தைக் காரணமாக பிப்ரவரியில் விடுதலையாகிறார்.

இதனை சிறைத்துறை அதிகாரி உறுதி செய்துள்ளார், வியாழக்கிழமை காலை சிறையில் இருந்து விடுதலையாகும் சஞ்சய் தத்தை, அவரது மனைவி மான்யதா, குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் வரவேற்க திட்டமிட்டுள்ளனர். இதனை அவரது ரசிகர்களும் பாலிவுட்டைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் மும்பையில் வரலாற்று சிறப்புமிக்க ரெஸ்டாரண்டான நூர் முகம்மது ஹோட்டல் சஞ்சய் தத் வெளியாவதை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக சிக்கன் கறி கொடுக்க உள்ளனர்.

இந்த ரெஸ்டாரண்டின் ஆஸ்தான வாடிக்கையாளராம் சஞ்சய் தத். அவரை சிறப்பிக்கும் விதமாக அவரது பெயரான சஞ்சு பாபா என்ற பெயரிலேயே கடந்த பல வருடமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது அந்தக் குறிப்பிட்ட சிக்கன் உணவு. மேலும் அந்த சிக்கன் கறியை உருவாக்கியவரும் சஞ்சய் தத் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!