பிரதமர் மோடியை அவமானப்படுத்திய நடிகை....வைரலாகும் வீடியோ!

இந்தியப் பிரதமரான மோடி காலத்திலும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே சுமூகமான விஷயங்கள் ஏதும் நடக்கவில்லை. பாகிஸ்தானிகள் மோடி மீது அதீத வெறுப்பில் இருப்பது நாமறிந்ததே. இதை நிரூபிக்கும் பொருட்டு சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் டிவி நடிகையான குவாண்டீல் பலோச் பிரதமர் மோடியை எச்சரித்தும் , கொஞ்சம் அவமானப் படுத்தியும் பேசிய வீடியோவை தனது முகநூலில் பகிர வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இவ்வாறு அவர் பேசியுள்ளார், மோடிஜி, உங்க டீ பிஸினஸ் ரயில்வே ஸ்டேஷன்ல எப்படிப் போகுது?. நான் இந்தியப் பிரதமர் மோடியைச் சொன்னேன். டார்லிங் மோடி பாகிஸ்தானிகளான நாங்க இயற்கையில் அன்பானவர்கள். ஆனால் எங்களைக் கோபப்படுத்தும் வரை. அப்படித் தூண்டினால் விளைவுகள் மிகக் கடினமாக இருக்கும். நீங்கள் அதில் தப்பிக்க முடியாது. எங்களைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டும். மேலும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் எங்கள் கோபம் உங்களைச் சும்மா விடாது எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது மோடியை அவமானப் படுத்தியதைக் காட்டிலும் குறிப்பிட்ட நடிகையைக் கிண்டல் செய்யவே அதிகம் சமூக வலைகளில் பகிரப்பட்டு வருகிறது. இந்தியர்கள் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். எனினும் சில செய்தி வட்டாரங்களில் விசாரித்ததில் பலோச் ஒரு விளம்பர பிரியை என்றும் அடிக்கடி ஏதேனும் சர்ச்சையான காரியங்களில் ஈடுபடுவது வழக்கம் என்றும் இப்போது கொஞ்சம் அதிகமான விளம்பர மோகத்தில் அடுத்த நாட்டுப் பிரதமரை வம்புக்கு இழுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

வீடியோவிற்கு:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!