ப்ரீத்தி ஜிந்தா திருமணம் - அமெரிக்க காதலரைக் கைபிடித்தார்

ப்ரீத்தி ஜிந்தா. கன்னக்குழி அழகி. உயிரே படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நாயகி. சினிமா மட்டுமல்லாமல் க்ரிக்கெட்டிலும் விருப்பமுடையவர். ஐ.பி.எல்லில், இவரது கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியினரின் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் - இவரது ஆட்டத்தையும் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருந்ததெல்லாம் உண்டு.
 

 

ப்ரீத்தி ஜிந்தா, கிங்ஸ் லெவன் அணியின் மற்றொரு உரிமையாளரான நெஸ் வாடியாவைக் காதலிப்பதாக செய்திகள் கசிந்தன. இருந்தாலும் அது நீடிக்கவில்லை.

இந்நிலையில், ப்ரீத்தி கடந்த ஞாயிறன்று தனது அமெரிக்க காதலரை திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் கசிகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனி குடெனஃப் என்பவரை மணந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி, இருதரப்பிலிருந்தும் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், பிரபல நகை வடிவமைப்பாளரான ஃபரா கான் அலி, திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் அவரது ட்வீட் மூலமுமாகவே தகவல் வெளியாகியுள்ளது,

 

ப்ரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பர்களான, கபீர் பேடி, சுஷ்மிதா சென் ஆகியோடும் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்த வண்ணம் உள்ளனர்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!