இந்த நடிகர்கள் நண்பர்களா? இல்லை எதிரிகளா?....குழப்பத்தில் ரசிகர்கள்! | Sharukh Khan and Salman Khan to their films in same day

வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (03/03/2016)

கடைசி தொடர்பு:17:51 (03/03/2016)

இந்த நடிகர்கள் நண்பர்களா? இல்லை எதிரிகளா?....குழப்பத்தில் ரசிகர்கள்!

அண்மையில் பாலிவுட்டில் அனைவரையும் கவர்ந்த விஷயம் இரண்டு கான்களின் நட்பு. ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இவர்களின் கட்டிப்பிடி செல்பி, சல்மானின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாருக் என சென்ற வருடம் டாப் 10 சம்பவங்களில் இதுவும் இடம் பிடிக்கும் அளவிற்கு இவர்களின் நட்பு பேசப்பட்டது. இந்த வருடமும் அப்படித்தான் இவர்களது நட்புறவைப் பாராட்டி பல செய்திகள்  உள்ளன. ஆனால் இவ்வருடம் வெளியாக இருக்கும் இவர்களது படம் ராயீஸ் மற்றும் சுல்தான் படங்கள் ஒரே நாளில் வெளிவரப் போவதாகவும், இதனால் அவர்களுக்குள் பனிப்போர் நிகழ்வதாகவும் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தது.

சபைகளில் இருவரும் தோழமையுடன் காணப்பட்டாலும் தங்களது பட ரிலீஸ் குறித்து இருவருமே குறிப்பிட்ட தேதியில் வெளியாக வேண்டும் என்று எண்ணுவதாகth தெரிகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் சுல்தான் மற்றும் ராயீஸ் இரண்டு படங்களுமே 2016 ரம்ஜானுக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷாருக் மற்றும் சல்மான் படங்கள் ஒரே தேதியில் வெளியானால் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிந்தே இரண்டு படக் குழுவினரும் அடம்பிடித்தவண்ணம் உள்ளனராம். சில வாரங்களுக்கு முன்னதாக ராயீஸ் படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாகச் செய்திகள் வெளியாக, படத்தின் தயாரிப்பாளர் ரித்தீஷ் சித்வானி " சில மனிதர்கள் ராயீஸ் படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக தவறான செய்தியை பரப்புகின்றனர்" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதே போல் சுல்தான் படத்தைத் தயாரித்து வழங்கும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமும் சுல்தான் ரிலீஸ் தேதியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளது. சமீப காலமாக நட்பதிகாரத்திற்கு உதாரணமாக பேசப்படும் கான்கள் இருவரும், தங்களது படங்கள் ஒன்றாக வெளியாகி மோதுவதைத் தடுப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்க, தொழில் என்று வரும் போது இருவருமே கறாராக இருப்பது தெரிகிறது. இதனால் வெளியில் இருவரும் நட்புடன் இருப்பது போல் இருந்தாலும், உண்மையில் இவ்விஷயத்தில் இருவருக்கும் இடையே பனிப்போர் நிகழ்வதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு படங்களுமே கிட்டத் தட்ட முடியும் தருவாயில் இருந்தாலும், படம் வெளியாக இன்னும் 4 மாதங்கள் உள்ளது என்பதால் தற்போதைக்கு எதுவுமே கூற இயலாது எனவும் ரித்தீஷ் சித்வானி கூறியுள்ளார். எப்படியும் இந்த வருடம் ரம்ஜான் களை கட்டுவது மட்டுமின்றி கல்லாவும் கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்