திரையுலகினரை அழைக்காமல் திருமணம் செய்த பாலிவுட் நடிகை | Bollywood actress Urmila Matondkar tied the knot

வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (04/03/2016)

கடைசி தொடர்பு:12:50 (04/03/2016)

திரையுலகினரை அழைக்காமல் திருமணம் செய்த பாலிவுட் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா , காஷ்மீரை சேர்ந்த மாடல் மற்றும் நடிகருமான மொஹ்சின் அக்தர் மிர் என்பவருடன் நேற்று திருமணம் நடைபெற்றது. 90களில் தனது நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் புதிய டிரென்டையே உருவாக்கிய ஊர்மிளாவின் திருமணம் தான் தற்போது பாலிவுட்டின் சுடச் சுடத் தருணம்.

குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தைத் துவங்கிய ஊர்மிளாவின் நடிப்பில் வெளியான ரங்கீலா, கவுன், ஸாத்யா, ஜங்கிள் மற்றும் பூத் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தில் கமலுடன் நடித்திருந்தார் ஊர்மிளா. 42 வயதான ஊர்மிளாவின் திருமணத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்கள் யாரும் அழைக்கப்படவில்லை.

பாலிவுட்டின் முன்னணி ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ரா மட்டும் கலந்துகொண்டுள்ளார். இதைப் பற்றி ஊர்மிளா கூறுகையில் " எங்கள் இரு குடும்பத்தினரும் திருமணத்தை எளிமையாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுபினர்களைக் கொண்டு நடத்தவே விரும்பினார்கள், அதன்படியே திருமணமும் நடைபெற்றது" எனக் கூறியுள்ளார்.  ஊர்மிளாவின் சினிமா கேரியரில் முக்கியப் படமான ரங்கீலா படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close