இந்திய சினிமாவின் செல்லுலாய்டு மனிதர் பி.கே.நாயர் மரணம்!

இந்திய தேசிய திரைப்பட காப்பகத்தை நிறுவியவரான பி.கே.நாயர் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 82. கடந்த 10 நாட்களாக உடல் நிலை சரியாக இல்லாமல் இருந்த அவர் இன்று காலை 11 மணி அளவில் மரணமடைந்தார்.

2008ல் இந்தியாவின் பழமையான மற்றும் சிறப்பு மிக்க படங்களான தாதா சாகிப் பால்கே இயக்கிய ராஜா ஹரிச்சந்திரா மற்றும் காலியா மார்டான், மேலும் பாம்பே டாக்கீஸின் படங்கள் ஜீவன் நையா, பந்தன், கங்கன், அச்சுத் கன்யா, கிஸ்மத், எஸ்.எஸ். வாசன் அவர்களின் 'சந்திரலேகா, உதய் ஷங்கரின் கல்பனா, போன்ற படங்களை பொக்கிசமாய் பாதுகாத்து வந்தமைக்காக சத்யஜித்ரே விருது வழங்கப்பட்டது.

2012ல் இவரைப் பற்றிய குறும்படம் "செல்லுலாய்டு மேன்" எடுக்கப்பட்டது. பின்னர் 60வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த வாழ்கை வரலாறு படம் மற்றும் சிறந்த படதொகுப்பிற்கான குறும்படம் விருதினை வென்றது.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!