வைரலாகும் தோனி பட டீஸர்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாராகவுள்ள 'தோனி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் ஏராளமான இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நடிக்க உள்ளனர்.

  சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக வலம் வரும் இந்திய அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு, சினிமாவாக வெளிவர உள்ளது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தில், தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார்.

தோனியின் கிரிக்கெட் சாதனைகள், அவர் சந்தித்த சோதனைகள்,தோனியின் தனிப்பட்ட வாழ்க்கையில் இடம் பெற்ற முக்கிய சம்பவங்கள், என இதுவரை தெரியாத சில ரகசியங்களாக மேலும் தோனியின் நெருங்கிய நண்பர்களை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீஸர் சரியாக டி20 ஆரம்ப நாளில் வெளியாகியானது. வெளியாகி ஒரே நாளில் 10 லட்சத்தைக் கடந்து வைரலாகியுள்ளது. மேலும் தோனியை ஒரு கிரிக்கெட் வீரராக, கேப்டனாக தெரிந்த நமக்கு இன்னும் பல விஷயங்கள் தெரிய வரும் என நம்பப் படுகிறது பார்க்கலாம்.

டீஸருக்கு:

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!