காதலில் விழுந்தார் கலாசலா!

பாலிவுட்டின் கிளாமர் குயினான மல்லிகா ஷெராவத் காதல் வயப்பட்டுள்ளார்,

2002ல் வெளியான ஜீனா சிர்ஃப் மெரே லியே படம் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் மல்லிகா ஷெராவத். 39 வயதான மல்லிகா தொடர்ந்து மர்டர், குரு, ஹிஸ், டபுள் தமால் என பல படங்களில் நடித்துள்ளார்.

ஜாக்கி சானின் தி மித் படம் மூலம் ஹாலிவுட்டிலும் ஒரு முக்கிய ரோலில் நடித்தார், மேலும் தமிழில் தசாவதாரம் படத்தில் வில்லியாகவும் மற்றும் ஒஸ்தி படத்தின் கலாசலா பாடல் மூலமாகவும் தமிழிலும் நன்கு பரிட்சயம். தற்போது மல்லிகா காதலில் விழுந்தார்.

பாரீஸின் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சிரில் ஆக்ஸென்ஃபேன்ஸுடன் நெருங்கிபழகி வருகிறார். மேலும் சென்ற மாதம் காதலர் தினத்தின் போது மல்லிகா ஷெராவத்தை ஒரு இளவரசி போல் உணரச்செய்து பரிசுகளால் அசத்தியுள்ளாராம் சிரில். அதில் விலையுயர்ந்த கார் ஒன்றும் அடக்கம். மேலும் இந்தச் செய்திக்கு ”மல்லிகா ஷெராவத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் காதல் வயப்படுவது உலகிலேயே மிகச் சிறந்த உணர்வு” என பதில் ட்வீட் செய்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!