வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (17/03/2016)

கடைசி தொடர்பு:18:06 (17/03/2016)

காதல் பிரச்னைக்கு வக்கீல் நோட்டீஸா? சினிமா உலகில் பரபரப்பு ஏற்படுத்திய ஜோடி!

பாலிவுட்டின் முன்னணி நடிகர் நடிகைகளான ஹ்ருத்திக் மற்றும் கங்கனா ரணாவத் இருவரும் ஒருவருக்கொருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்கனா ஒரு பேட்டியில் சில்லி எக்ஸ் ஏன் இப்படி முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறார் எனக் கேட்க, அதற்கு பதிலாக ஹ்ருத்தி நான் போப்புடன் பழக சாத்தியமுள்ளதே தவிர அந்த நடிகையைக் காதலிக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார்.

தற்போது இந்த பிரச்னை முற்றிப்போய் ஹ்ருத்திக் கங்கனாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார், கங்கனா பேட்டி என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இருவரும் காதலித்தது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் எங்கள் இருவருக்குமிடையே எந்தப் பழக்கமும் இல்லை என ஹ்ருத்திக் அனுப்பிய நோட்டிஸில் கூறப்பட்டுள்ளது. அதற்கு பதில் நோட்டீஸாக கங்கனா ரணாவத் 22 பக்கங்களில் சண்டையிட்டுள்ளார்.

நான் சில்லி எக்ஸ் எனச் சொன்னதை ஏன் நீங்கள் உங்களை என எடுத்துக்கொள்ள வேண்டும், தொழில் ரீதியான பழக்கமெனில் ஹ்ருத்திக் சகோதரி பிறந்தநாளில் கங்கனா கலந்துகொண்டுள்ளாரே, அதே போல் கங்கனாவின் பிறந்த நாளில் ஹ்ருத்திக் குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளாரே என காரசாரமாகவே இருக்கிறது அந்த நோட்டீஸ்.

இவர்களின் இந்தச் சண்டை தற்போது பாலிவுட் வாசிகளை அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடையச் செய்துள்ளது.ஏற்கனவே ஹ்ருத்திக் தனது மனைவியைப் பிரிந்ததற்குக் காரணம் கங்கனாவுடன் ஏற்பட்டக் காதல் தான் என கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வக்கீல் நோட்டீஸ் சண்டை இன்னும் பெரிதாக வெடித்துள்ளது. ஓ இதான் காதல் ரத்துப் பத்தரமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்