நிர்வாண நடனம் ஆடிமுடியவில்லையே, வீடியோவில் ஆதங்கப்படும் நடிகை

பாகிஸ்தான் நாட்டு டிவி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பார்.

ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவில் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி இருந்தார். இந்த மாதிரி பைத்தியத்தை கேப்டனாக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது என கூறி இருந்த குவான்டீல் பலூச் அதற்கும் முன்னதாக பிரதமார் நரேந்திர மோடியை அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில்  வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குவான்டீஸ் பலூச், தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் 2 முறை மோதுகிறது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால்   நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார் மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு சிறப்புச் சலுகை ஒன்றையும் அறிவித்தார். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர் என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன். என்று அந்த வீடியோவில் குவான்டீஸ் பலூச் அறிவித்து இருந்தார்

இந்நிலையில் மார்ச் 19 அன்று  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாகை சூடியது. இந்தியாவின் இந்த அபார வெற்றி, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எத்தகைய வெறியை ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்கும் விதமாக சர்ச்சை நடிகை குவான்டீல் பலூச் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெற்றி பெற முடியாமல் போனது பற்றியும் தனக்கு நிர்வாணமாக நடனம் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்தும் தனது வயிற்றெரிச்சலை ஆற்றும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை அந்த வீடியாவில் திட்டித் தீர்த்து இருக்கிறார். ஏன் என்னை ஏமாற்றி விட்டார் அப்ரிடி என்று கண்ணீடன் கேள்வி எழுப்பும் குவான்டீல் பலூச் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களையும் எச்சரித்துள்ளார்.

இனி நீங்கள் பாகிஸ்தானுக்கு வரக்கூடாது, வரவே கூடாது, வந்தால் பாகிஸ்தான் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள் எனவும் அவர் மிரட்டியுள்ளார் என்பதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.

 எஸ்.மகேஷ்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!