Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எக்குத்தப்பாக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்- பளார் விட்ட சன்னிலியோன்!

பாலிவுட் நடிகை சன்னி லியோன்  பேட்டி, நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் அவரிடம் ஒரு பெண் என்றும் பாராமல் கேட்கக் கூடாத சில கேள்விகளைக் கேட்டு நிருபர்கள் வாங்கிக் கட்டிக்கொள்வது நடந்தேறி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் சன்னி லியோனுடன் ஹோலி கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹோட்டலில் சன்னியை பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் முன்பு நீங்கள் ஆபாச பட நடிகையாக இருந்தீர்கள், தற்போது நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை. இப்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டார். அதைக் கேட்டு கோபம் அடைந்த சன்னி லியோன் அந்த கேள்வியை மீண்டும் கேட்குமாறு கூறினார்.

அவர் அப்படியே மாற்றி இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என்று கேட்க சன்னி லியோன் சற்றும் யோசிக்காமல் அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

இதற்கு சன்னி லியோன் சார்பில் அவரது கணவர் பதில் கூறுகையில் சன்னி லியோன் நல்ல பதில் கொடுத்துள்ளார். இதற்காக நாங்கள் போலீசுக்கு செல்லவில்லை. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கல்லூரி மாணவர்கள். அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அப்படியே விட்டுவிட்டோம் என்றார்.

இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு டிவி தொகுப்பாளர் ஒருவர் சரமாரியாகக் கேள்விகள் கேட்க அதற்கு பொறுமையாகப் பதில் அளித்த சன்னி லியோனுக்கு ஆதராவாகவும், தொகுப்பாளருக்கு எதிரான கண்டங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்