”சச்சின்” நடிகை பிபாஷா பாசுவுக்கு திருமணம்! | Bipasha Basu and Karan Singh Grover announced their wedding date

வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (30/03/2016)

கடைசி தொடர்பு:15:29 (30/03/2016)

”சச்சின்” நடிகை பிபாஷா பாசுவுக்கு திருமணம்!

பாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவரான பிபாஷா பாசு தமிழில் விஜய்யின் சச்சின் படத்தில் மட்டுமே நடித்தார். பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். தூம் 2, ராஸ், ஜிஸ்ம், ரேஸ், க்ரியேச்சர், அலோன் என பல முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் ப்ஹ்ரம், ஹேட் ஸ்டோரி3 , அலோன் , உள்ளிட்ட படங்களில் நடித்த சினிமா மற்றும் டிவி நடிகருமான கரண் சிங் க்ரோவருக்குமிடையே தான் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிபாசா பாசுவை விட 4 வயது கரண சிங்கிற்கு வயது குறைவு .

 ஜான் ஆபிரகாமை காதலித்த பிபாசா அவருடனான காதல் ரத்துக்குப் பிறகு அலோன் படத்தில் நடித்த வேளையில் கரணுடன் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் 28ம் தேதியும், வரவேற்பு அடுத்த நாள் ஏப்ரல் 29ல் பாலிவுட் சினிமா நண்பர்கள், முக்கியஸ்தர்கள் சூழ நடைபெற இருக்கிறதாம்.

 அலோன் படத்தின் பிபாஷா - கரண் ரொமாண்டிக் பாடல் வீடியோ:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close