15 வருடங்கள் கழித்து அரவிந்த் சாமியின் அடுத்த ஸ்டெப்! | ‘Roja’ actor Arvind Swamy returns to Bollywood with ‘Dear Dad’

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (01/04/2016)

கடைசி தொடர்பு:16:31 (01/04/2016)

15 வருடங்கள் கழித்து அரவிந்த் சாமியின் அடுத்த ஸ்டெப்!

ஜெயம்ரவி நடிப்பில் உருவான தனிஒருவன் படத்தில் சித்தார் அபிமன்யூவாக நடிப்பில் பட்டையைக் கிளப்பிய அரவிந்த் சாமி அடுத்ததாக பாலிவுட்டிலும் கலக்கவிருக்கிறார். அப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியில் உருவாகிவரும் இப்படத்தின் பெயர் “டியர் டாட்” (Dear Dad). தனுஜ் என்ற அறிமுக இயக்குநர் இயக்கிவரும் இப்படத்திற்கான டீஸர் வரும் வாரங்களில் வெளியாகவிருப்பதாகவும் தெரிகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுக நாயகனாக அரவிந்த் சாமி, 15 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியில் கால் பதித்திருக்கிறார்.
தந்தைக்கும், 14 வயதான மகனுக்குமான வாழ்க்கையே டியர் டாட் படத்தின் கதைக்களம்.

இன்றும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல், 45 வயதான ஒரு நடிகர் தனக்கான கச்சிதமான கதாபாத்திரங்களைத் தேடி நடித்துவருகிறார் அரவிந்த் சாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்