வரி ஏய்ப்பு விவகாரம்- தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் விளக்க அறிக்கை கொடுத்த அமிதாப்

வரியிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் சொத்து குவித்த இந்தியர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. பிரபலமானவர்கள், முக்கியஸ்தர்கள், சினிமா துறையச் சேர்ந்தவர்கள் என பலரின் பெயர்களும் அடங்கிய பட்டியல் ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது 

இதில் பன்னாட்டு ஊடகங்கள் பலவற்றின் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸமும் பின்னணியில் இருந்துள்ளது. இந்நிலையில் இதற்கு அமிதாப் பச்சன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதில், இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ள எந்த கம்பெனியுடனும் எனக்கு சம்மந்தம் இல்லை. சீ பல்க் ஷிப்பிங் லிமிடெட், லேடி ஷிப்பிங் லிமிடெட், ட்ரஷர் ஷிப்பிங் லிமிடெட்,மற்றும் ட்ராம்ப் ஷிப்பிங் லிமிடெட், இப்படி எந்தக் கம்பெனியிலும் நான் இயக்குநராக இருந்ததில்லை.

எனது பெயர் தவறாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனது வரிகள் அனைத்தையும் கட்டியுள்ளேன். அயல்நாட்டில் நான் செலவழித்த பணம் முதல், வெளிநாட்டுக்குப் பணம் அனுப்பியது வரை அனைத்திற்கும் நான் வரி செலுத்தியுள்ளேன்.

இது அனைத்தையும் நான் சட்டப்பூர்வமாகவே செலுத்தியுள்ளேன். மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ள பட்டியலிலும் என்னுடைய பெயர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடவில்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!