கங்கனாவின் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியீட்ட ஹ்ருத்திக் ரோஷன்? கைது செய்யக்கோரி மனு!

சில நாட்களாகவே ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் கங்கனா ரனாவத் இருவருக்குமிடையே வக்கீல் நோட்டீஸ்கள், போலீஸ் வழக்குகள் என கார சார பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இது குறித்து நமது சினிமா விகடன் தளத்திலும் செய்திகள் வெளியாகின. எனது முன்னாள் காதலர் என கங்கனா ஒரு பேட்டியில் சொல்ல ஹ்ருத்திக் ரோஷன் எனக்கு எந்தக் காதலியும் இல்லை. இது என் மீது சுமத்தப்பட்டுள்ள வீண் வதந்தி என்று கூற பிரச்னை ஆரம்பமானது. 

இந்நிலையில் சமீபத்தில் கங்கனாவின் வக்கீல் மும்பை போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார், வக்கீல் ரிஸ்வான் சித்திக் கொடுத்த அந்த புகார் மனுவில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனது கட்சிக் காரர் கங்கனாவின் அந்தரங்கமான புகைப்படங்களையும், சில ரகசிய மின்னஞ்சலகளையும் மூன்றாம் நபர்களுடன் ஹ்ருத்திக் ரோஷன் பகிர்ந்துள்ளார், இந்தச் செயல் கங்கனா ரனாவத்திற்கு சமுதாயத்தில் இருக்கும் அந்தஸ்த்தை குறைக்கும் விதமாக இருக்கிறது.

உடனடியாக இதை குற்றவியல் செயலாகக் கொண்டு வழக்கு எண் 151ன் கீழ் பிரிவு 149 மற்றும் 150ன் படி விசாரணை செய்து ஹ்ருத்திக் ரோஷனை கதை செய்ய வேண்டும் என அந்தப் புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது. இருவரின் இந்த சண்டையால் பாலிவுட் வாசிகள் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்ந்துள்ளனர்”. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!