சந்தனக் கடத்தல் வீரப்பன் திரைப்படம் - ராம்கோபால் வர்மா வெளியிட்ட போஸ்டர்

 

சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையை ராம் கோபால் வர்மா திரைப்படமாக எடுத்து வருகிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டு அது டிரெண்டாகி வருகிறது. வரும் மே 27ம் தேதி இந்தியில் வெளியாகிறது ‘வீரப்பன்’ திரைப்படம்.

 


அனுராக் காஷ்யபின் ‘ராமன்ராகவ்’ திரைப்படமும் அதே 27, தேதி வெளியாகிறது.

ராமன்ராகவ், மும்பையில் தொடர்கொலைகள் செய்தவன். ஒருமுறை பிடிபட்டு நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாததால், விட்டுவிட்டார்கள். மீண்டும் 1968ல் பிடிபட்டபோது, தான் 1966ல் 23 கொலைகள் செய்ததாகவும், 1968ல் டஜன் கணக்கில் கொலைகள் செய்துள்ளதாகவும் ஒப்புக்கொண்டான். எத்தனை கொலைகள் செய்தேன் என்று தனக்கே நினைவில்லை என்றும் சொன்னான். அந்தக் காலகட்டத்தில் மும்பை முழுதுமே பீதியில் உறைந்து போயிருந்தது, இந்தத் தொடர்கொலைகள் காரணமாக.

ராம் கோபால் வர்மாவின் வீரப்பன், அனுராக் காஷ்யபின் ராமன்ராகவ் இரண்டு படங்களும் மே 27 அன்று மோத இருக்கின்றன.

இதுபற்றி தன் ட்விட்டில் குறிப்பிட்டுள்ள ராம் கோபால் வர்மா, ‘ரெண்டு வில்லனில் யார் சிறந்த வில்லனோ, அவன் ஜெயிக்கட்டும்’ என்றிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!