தோழா இந்தி ரீமேக்கில் அமிதாப் பச்சன்?

கார்த்தி, நாகர்ஜுனா மற்றும் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிதும் பேசப்பட்ட தோழா, விரைவில் இந்தியிலும் ரீமேக்காகவிருக்கிறது.

தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான தோழா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இயக்குநர் கரண்ஜோகர் கைப்பற்றியிருக்கிறார். இந்தியில் நாகர்ஜூனா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும், கார்த்திக் ரோலில் வருண் தவானை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

விபத்தினால் உடல் செயலிழந்து இருக்கும் பணக்காரரான நாகார்ஜூனாவை, பார்த்துக்கொள்ளவரும் கார்த்தி, இந்த இருவருக்குமான நட்பு தான் படத்தின் ஒன்லைன். அப்படியே இந்திக்கு ஏற்றதுபோல உருமாற்றினால் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்கிறது பாலிவுட் வட்டாரங்கள். 

அமிதாப் பச்சன், வயதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான, பிகு ஹிட்டடித்ததால், அதே பார்முலாவை இந்தப் படத்திலும் பின்பற்ற படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். கரண்ஜோகர் அதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் நடிக, நடிகைகளை உறுதிசெய்வார் என்றும் தெரிகிறது.

ப்ரெஞ்ச் மொழியில் உருவான இன்டச்சபிள்ஸ் படத்தின் ரீமேக்கே தோழா என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!