ஷாருக்கின் Fan - படத்தைப் பற்றி நீங்கள் அறியாத 8 சுவாரஸ்யமான உண்மைகள்!

1. இந்தப் படத்தின் டைட்டில் லோகோ, ஷாருக்கின் நிஜ ரசிகர்களின் முகங்களை வைத்து கொலாஜ் செய்யப்பட்டது


இந்த லோகோவை உன்னிப்பாக பார்த்தீர்களானால், பல முகங்கள் தெரியும். எல்லாமே ஷாருக்கின் ரசிகர்கள். ரசிகர்களுக்கென  ஒரு போட்டி வைத்து, அதில் ஜெயித்த 100 பேரின் ப்ரொஃபைல் படங்களை இந்தப் பட லோகோவிற்காகப் பயன்படுத்தினார்கள்.

2. தன் ரசிகன் வேடத்துக்காக 3D ஸ்கேனிங்கில் ஷாருக்



ஸ்டாராகவும், ரசிகனாகவும் ஷாருக்கே நடித்துள்ளதால், ரசிகனாக நடிப்பதற்காக முகத்தை 3D ஸ்கேனிங் மூலம் அவரைப் போலவேவும், கொஞ்சம் மாற்றம் இருக்கும்படியும் காட்டியிருக்கிறார்கள். இந்த டெக்னாலஜியை ஷாருக் பயன்படுத்துவது இதுவே முதல்முறை.

3. ஷூட்டிங்கின்போது நிஜமாகவே அடிபட்டுக் கொண்ட ஷாருக்


க்ரோஷியாவில் ரசிகன் கௌரவைத் துரத்தும் மிக நீண்ட சேஸிங் காட்சி படமாக்கப்பட்டபோது ஷாருக்கிற்கு காலில் அடிபட்டது. நிற்க, நடக்கக்கூட சிரமப்பட்டாலும், பிஸியோதரஃபி சிகிட்சையெல்லாம் மேற்கொண்டு குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதாம்.
 

4.  லண்டன் மேடம் டுஸாட்ஸ் ம்யூசியத்தில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம்.
 

 

இடைவேளைக்குப் பிறகு லண்டன் மேடம் டுஸாட் ம்யூசியத்தில் படத்தின் முக்கியமாக காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக சிறப்பு அனுமதியெல்லாம் வாங்கி படமாக்கினார்கள்.
 

5. உண்மையான காட்சிகளும் படத்தில் உண்டு.
 

 

படத்தின் நடிகர் ஆர்யன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வீட்டில் நின்றபடி ரசிகர்களுக்கு கையசைக்கும் காட்சிகள் ஒன்றிரண்டு வரும். அதற்காக கடந்த இரண்டு வருடங்களில் உண்மையாகவே ஷாருக் வீட்டு முன்பு எடுக்கப்பட்ட வீடியோக் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டதாம்.
 

6.  செட் போடப்பட்ட, ஷாருக்கின் உண்மையான வீடு!
 

மேலே சொன்னமாதிரி சில கட்ஸ் நிஜ காட்சிகளாக காட்டப்பட்டாலும், உண்மையாகவே ஷாருக் வீட்டை ஷூட்டிங்கில் காண்பிக்க வேண்டி வந்தது. ஆனால் முறையான அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே மும்பை ஃபிலிம் சிட்டியில் ஷாருக்கின் வீடு மாதிரியான செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது.
 

7. இரண்டு முறை ரிலீஸ் தள்ளிப்போன FAN

ரயீஸ், தில்வாலே படங்களுக்கு முன்பே படம் முடிந்து விட்டதாக ஷாருக் தெரிவித்திருந்தார். மூட்டு வலியால் கொஞ்சநாள் தள்ளிபோன ரிலீஸ் தேதி, படத்தின் சவாலான விஷுவல் எஃபெக்ட் காரணமாக திரும்பவும் தள்ளிப்போனது. 2015ன் ஆரம்பத்திலோ, நடுவிலோ வந்திருக்க வேண்டிய படம் இது.
 

8. ரசிகன் வேடத்தின் மேக்கப்பிற்காக வரவழைக்கப்பட்ட ஹாலிவுட் கலைஞர்கள்.

 

ரசிகனாக, கௌரவின் கதாபாத்திரம் சின்னச் சின்ன மாறுதலோடு இருக்க வேண்டும், ஆனால் சில காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ஆர்யனாகவும் காட்சியளிக்கவேண்டும். அதற்காக ஹாலிவுட்டின் ‘க்ரெய்க் கனொம்’ வரவழைக்கப்பட்டு, பங்கு கொண்டார். முன்று முறை ஆஸ்கர் வாங்கியவர்  இவர்.
 

 

இதைப் படிச்சீங்களா?

.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!