சல்மான்கானை கவர்ந்த சென்னையின் உண்மை சம்பவம்!

சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் டிராபிக். இந்தப் படம் மலையாளத்தில் ஸ்ரீனிவாசன், ஆஸிஃப் அலி, ரஹ்மான் நடிப்பில் டிராபிக் எனவும் அதன் ரீமேக்காக தமிழில் சென்னையில் ஒரு நாள் என்னும் பெயரில் சரத்குமார், சேரன், பிரகாஷ் ராஜ், பிரசன்னா நடிப்பில் வெளியானது. கடந்த பிப்ரவரி 27ந்தேதி கல்லீரல் தொடர்புடைய நோயினால் கேரளாவின் கொச்சி நகரில் மரணமடைந்த ராஜேஷ் பிள்ளை தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சென்னையில் சாலை விபத்தில் தனது 15 வயது மகனை இழந்த மருத்துவ தம்பதியினர் அவரது இதயத்தைத் தானம் கொடுத்து ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர். அந்த இதயத்தை சரியான நேரத்தின் டிராபிக் மிகுந்த சாலையில் கடந்து சேர்ப்பதே படத்தின் திக் திக் நிமிடங்கள். இந்தக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதே டிராபிக் படம். மலையாளம் , தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இப்படம் தற்போது இந்தி ரசிகர்களையும் கவர தயாராகிவிட்டது.

இந்தியிலும் டிராபிக் என்னும் பெயரிலேயே உருவாகியுள்ள இப்படத்தில் மனோஜ் பாஜ்பாய், ஜிம்மி ஷெர்கில், பிராசன்ஜித் சாட்டர்ஜி, பரம்பிரதா சாட்டர்ஜி, திவ்ய தத்தா மற்றும் அமோல் பரஷார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மே 6ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரெய்லரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தியின் டாப் நடிகர் சல்மான் கான் படத்தைப் பார்க்க வேண்டும் என தன் ஆர்வத்தைப் பகிர்ந்துள்ளார்.

டிரெய்லருக்கு:  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!