ரஜினி அற்புதமானவர்... கபாலி நாயகி ராதிகா ஆப்தே பதில்! | There is no one like Rajinikanth, says Radhika Apte

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (26/04/2016)

கடைசி தொடர்பு:16:57 (26/04/2016)

ரஜினி அற்புதமானவர்... கபாலி நாயகி ராதிகா ஆப்தே பதில்!

ராதிகா ஆப்தே நடித்து தமிழில் சில படங்கள்  மட்டுமே ரிலீஸாகியுள்ளது. அதற்குள் ரஜினிக்கு நாயகியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் செம ஃபேமஸ் ஆகி விட்டார். அவ்வப்போது வித்யாசமான குறும்படங்கள் , வீடியோக்கள் என ராதிகா ட்ரெண்டில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக இந்தியில் ஃபோபியா என்னும் இந்திப் படத்தில் ராதிகா நடித்திருக்கிறார். அகோரா ஃபோபியா எனப்படும் வெளிவட்டார பயம் தான் இந்தப் படத்தின் கதை. ராதிகாவுக்கு இந்தப் படத்தில் ஷாப்பிங் மால்ஸ், திரையரங்கம், வெட்டவெளி, விமான நிலையம், பாலங்கள்  என எங்கு சென்றாலும் பயம் மேலும் வெளியான டிரெய்லரைக் காண்கையில் வீட்டுக்குள்ளேயே ஒரு பொறியில் சிக்கியது போல் வாசற்படி தாண்டவே பயந்தே வாழ்கிறார் ராதிகா. அவரைச் சுற்றி நடக்கும் கதையென டிரெய்லர் இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ராதிகா, ரஜினி, கபாலி படம் குறித்து பேசியுள்ளார். அவரிடம் கபாலி பட அனுபவங்களை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது .அதற்கு ராதிகா ஆப்தே, ரஜினி சாருடன் மலேசியாவில் நடந்த படப்பிடிப்பு மிகவும் நன்றாக இருந்தது. இப்படத்தில் நடித்தது என் வாழ்வின் மிகவும் சிறந்த அனுபவமாகும்.ரஜினி சாரை போல் யாருமே இல்லை, மிகவும் அற்புதமான மனிதர் என தெரிவித்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் தற்சமயம் ஈராஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் மட்டுமே வெளியாகியுள்ளது. ஓரிரு தினங்களில் யூடியூபில் வெளியாகும் எனத் தெரிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்