அட! ஷாருக், கௌரவ் ஆனது இப்படியா!! #ஆச்சர்ய வீடியோ! #FAN

ஃபேன் படத்தில் சூப்பர் ஸ்டார் ஆர்யன் கன்னாவாகவும், அவரது வெறி பிடித்த ரசிகன் கௌரவாகவும் நடித்திருப்பார் ஷாருக் கான். ஆர்யன் கன்னாவாக, ‘உள்ளது உள்ளபடியே’ நடித்திருப்பார். நிஜ ஷாருக்தான் ஆர்யன். ஆனால் கௌரவாக, நடிக்கும் கதாபாத்திரம் கிட்டத்தட்ட ஆர்யன் கன்னாவை - அதாவது ஷாருக்கையே- ஒத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் இயக்குநர் மணீஷ் ஷர்மா.

’ஐம்பது வயசுக்காரனை இருபது வயசு ஆளா காமிக்கறதெல்லாம் மிகவும் சிரமம். சதை கூடிடும், இமைகள், தாடை, கழுத்துன்னு எல்லாத்துலயும் மாற்றம் இருக்கும். ஒரு பாடல் காட்சி, ஒரு சில நிமிடக் காட்சின்னா சமாளிக்கலாம். படம் முழுவதும் வரணும். ஆடணும், பாடணும், குதிக்கணும், அழணும், க்ளோஸப்ல காமிக்கணும், சண்டை போடணும்.. ம்ஹும்.. சான்ஸே இல்லை’ என்று பலரும் கைவிரித்து விட ரெட் சில்லீஸ் நிறுவனம் இதன் VFX (விஷுவல் எஃபெக்ட்ஸ்) பொறுப்பை ஏற்கிறது.

அவர்களும் இதன் சிரமத்தை அலசுகின்றனர். வெறும் விஷுவல் எஃபெக்ட்ஸில் இதைச் செய்வது சுலபமல்ல, என்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது சாத்தியமே இல்லையோ என்று மணீஷ் ஷர்மா நினைக்கும்போதுதான், இந்தத் திட்டத்தில், ஹாலிவுட் க்ரெய்க் இணைகிறார். ‘அதன் பிறகுதான் நம்பிக்கை வந்தது’ என்கிறார் மணீஷ்.

இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்ட வீடியோவில், மணீஷ், ஷாருக், க்ரெய்க், ரெட் சில்லீஸ் நிறுவனத்தினர் ஆகியோர் விளக்கமாக இந்த கௌரவ் கதாபாத்திரம் உருவான விதத்தையும், அதற்கு என்னென்ன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டது என்பதையும் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்கள். மிகவும் சுவாரஸ்யமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

கீழே ஒரு சில படங்களைப் பாருங்கள்..

 

 
‘ஒரு இடத்துல அஞ்சாறு மணி நேரம் உட்கார்றதுன்னாலே எனக்கு சுத்தமா பிடிக்காது. மேக்கப்புக்காக அப்டி உட்கார வெச்சாங்க. கோவப்படக்கூடாது’ன்னு முடிவோட இருந்தேன். கன்னக்குழி வராதுன்னாங்க.. வர்லைன்னா அது ‘என்னை மாதிரியே இருக்கற ரசிகன் அல்லவே அல்ல’ன்னேன்’ என்று ஷாருக்கும் ‘அந்த ரெண்டு பேர் மூக்குல வித்தியாசம் காமிக்கறதுக்குள்ள போதும் போதும் ஆய்டுச்சுன்னு ரெட் சில்லீஸ் நிறுவனத்தாரும் சொல்லும் இந்த வீடியோவை முழுமையாகப் பார்த்து பிரமிக்க...

.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!