மூன்று கான்களை ஒன்றிணைத்தார் மோடி... எப்படி?

ஷாருக்கான் , சல்மான்கான், அமீர்கான் என மூன்று கான்களுக்கும் மோடி சிறப்பு அழைப்பு கொடுத்துள்ளார். மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இதைக் கொண்டாடும் வகையில் ”ஸாரா முஷ்குரா டு” என்னும் பெயரில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மே 26ம் தேதி நடக்கவுள்ள இந்த விழாவுக்குத்தான் மூன்று கான்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மோடியின் இரண்டாண்டு சாதனைகள் அடங்கிய வீடியோ ஒன்றும் ஒளிபரப்பப்பட உள்ளது. 60000 மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமிதாப் பச்சன் இந்த நிகழ்ச்சியை துவங்கி வைக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு ஸ்வச் பாரத் அபியான், டிஜிட்டல் இந்தியா, மற்றும் ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் போன்ற திட்டங்களின் தூதர்களாக செயல்பட்ட விஐபிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜய் தேவ்கன், சாய்னா நெஹ்வால், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜ்குமார் ஹிரானி, ரிதேஷ் தேஷ்முக் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி குறித்து மூன்று கான்களும் தங்களது வலைதளங்களிலும் பேசத்துவங்கியுள்ளனர். மும்பையின் இந்தியா கேட் அருகில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!