கரன்ஜித் கவுர் வோராவுக்கும் சன்னி லியோனுக்கும் என்ன சம்மந்தம்?

'

சந்தோசமான விசயம்... இன்னைக்கு சன்னி லியோனுக்கு பிறந்த நாள். ஆனா, அவங்க பேரைச் சொன்னாலே ஒரு பக்கம் அதிரும். இன்னொரு பக்கம் முகம் சுளிக்கவும் செய்வாங்க. ஏன்னா, சன்னி லியோனின் மறுபக்கம் அவங்களுக்குலாம் தெரியாது. சன்னி லியோன் அடல்ட்ஸ் ஒன்லி நடிகை மட்டுமல்ல... ஒரு பெண்ணாக பல அவதாரங்கள் வைச்சிருக்காங்க.

சன்னி லியோன் 2011ம் ஆண்டு டேனியல் விபெர் என்பவரைத் திருமணம் செய்து இப்போது வரை ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அன்போடு வாழ்கிறார்கள். 'சன்னி அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடித்தவர்தான். அதை நான் தொழிலாக மட்டுமே பார்க்கிறேன். எனக்கு கிடைத்த மிகப்பெரும் செல்வமாகவே சன்னியை நான் நினைக்கிறேன்'' என்கிறார் அவரது கணவர்.

சன்னியின் தந்தை, 2010ம் ஆண்டு கேன்சர் நோயால் மரணமடைந்தார். இதன் காரணமாக 2011ம் ஆண்டு அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் நடை பெற்ற மாரத்தானில் கலந்துகொண்டு ஓடினார். இந்த மாரத்தான் அமெரிக்க கேன்சர் சொசைட்டிக்குப் பணம் திரட்ட நடைபெற்றது. நடிப்பு என்று வந்துவிட்டால் சன்னி, சின்சியர் சிகாமணியாம். படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் ’பேக் அப்’ சொல்லும் வரை மொபைல் பயன்படுத்தவே மாட்டாராம். பேக் அப் என்றவுடன் இயக்குநரிடம் வேறு ஏதேனும் வேலை இருக்கிறதா என்று கேட்டுவிட்டுத்தான் செல்போனையே வெளியில் எடுப்பாராம். இதை  'லீலா’ படத்தின் இயக்குநர் பாபிகான் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். மேலும் சன்னி நாயகி யாக நடித்து வரும் 'லீலா’ வரலாற்றுப் படம் என்ப தால், அரச குமாரிகள் கொடி இடையாளாக இருக்க வேண்டும் என இயக்குநர் கேட்டுக்கொள்ள, ஐந்து கிலோ எடை குறைத்து ரிஸ்க் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோன் டிசைன் செய்த தங்க நிற கவுன்

'சன்னிக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியம். படப்பிடிப்புத் தளத்தில் வேலைப் பார்க்கும் மக்களின் குழந்தைகள் வந்தால் நேரம் பார்க்காமல் விளையாடுவார். மேலும் குழந்தையின் தந்தையிடம் குழந்தைக்கு என்ன தேவை என்றாலும் என்னிடம் சொல்லுங்கள் என கூறுவாராம்’ என நெகிழ்ந்துள்ளார் சன்னி லியோனுடன் நடித்த கதாநாயகன் சச்சின் ஜோஷி.

சன்னி லியோன் தனது உடைகளைத் தானே டிசைன் செய்து கொள்வார். அப்படி சமீபத்தில்  ஒரு வாசனை திரவிய விளம்பரத்திற்காக இவர்  மெனெக்கெட்டு டிசைன் செய்துள்ள உடையின் வேலைப்பாடுகள் காண்போர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சன்னி லியோன் டிசைன் செய்த தங்க நிற கவுன்

கவர்ச்சி நாயகியாக மட்டுமே தெரிந்த சன்னி ஓர் ஓவியர். அப்ஸ்ட்ராக்ட் ஓவியம் வரைவதில் சன்னிக்கு ஆர்வம் அதிகம். 'செய்யும் தொழிலைத் தொழிலாக மட்டும் பாருங்கள்’ என கூறும் சன்னிக்கு முதல் நண்பர் அவரது கணவர் டேனியல்தான். 'அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. 100 முதல் 200 பணியாளர்கள் முன்னிலையில் அந்த மாதிரியான படங்களில் நடிப்பது சாதாரண படங்களில் நடிப்பதைக் காட்டிலும் கடினம்’. அதற்காக அதை நியாயப் படுத்த மாட்டேன். அந்த வாழ்க்கையை நானே மறக்க நினைக்கிறேன். என்பதுதான் உண்மை என்கிறார் சன்னி லியோன்.

ஹேப்பி பர்த் டே சன்னி லியோன்..!

டெயில் பீஸ்: அப்புறம், சன்னி லியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா!

- ஷாலினி நியூட்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!