கோபம் கொடுத்த விருது...சோனாக்‌ஷி சின்ஹா ஹேப்பி அண்ணாச்சி!

பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா கோபப்பட்டதால் விருது பெற்றிருக்கிறார் என்றால் நம்புவீர்களா?...

தி ஆங்ரி பேர்ட்ஸ் படக் குழு , ‘தி ஆங்ரீஸ்’ என்னும் தலைப்பில் சினிமா பிரபலங்களுக்கு விருதுகள் கொடுத்து வருகிறார்கள். மொபைல் ஆண்ட்ராய்டு கேம்களில் மிகப் பிரபலமாக விளையாடப்பட்ட தி ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே “தி ஆங்ரி பேர்ட்ஸ்” படம்.

இந்தப் படம் வருகிற மே 20ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் புரமோஷன்கள் தற்சமயம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு சென்னையின் பிரபல மால்கள், மற்றும் பொது இடங்களில் குழந்தைகளுடன் படக்குழு இணைந்து விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

இதன் அடுத்த கட்டமாக கோபத்தை மறைக்காமல் வெளிப்படுத்தும் பிரபலங்களுக்கு விருது கொடுக்கும் நிகழ்வு மும்பையில் நடந்து வருகிறது. அதில் தான் இணையதளத்தில் ட்ரோல் செய்து கிண்டல் செய்தவர்களைக் கண்டு கோபப் பட்டு பதிலடி கொடுத்த சோனாக்சி சின்ஹா  தி ஆங்ரீஸாக முதல் விருதை வென்றுள்ளார். விருது வாங்கிய சோனாக்‌ஷி சின்ஹா, ”உண்மையாக, வலிமையாக இருங்கள், உங்களுக்காகப் போராடுங்கள், நீங்கள் நீங்களாக இருங்கள்”, எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!