திகார் ஜெயிலில் திரையிடப்படும் சினிமா!

ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பேசப்பட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்ப்ஜித். உண்மைக் கதையை மையமாகக்கொண்டு படமாக்கப்பட்ட இப்படம் தற்பொழுது திகார் சிறைக் கைதிகளுக்கு திரையிடப்பட்டுவருகிது.

டில்லியின் திகார் சிறைக்கைதிகளுக்கு “சர்ப்ஜித்” திரைப்படம் சிறப்புக் காட்சியாக போடப்பட்டு வருகிறது. வரும் ஜுன் 8ம் தேதி வரை திரைப்படத்தை பல காட்சிகளாக திரையிட திட்டமிட்டுள்ளது. இந்த திரையிடல் ஜூன் 5ம் தேதி முதல் திரைப்படம் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Bio-Pic' படங்களின் வரிசையில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில்
, 1990ல் பாகிஸ்தான் ராணுவத்தால் ‘எல்லை தாண்டிய’ குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருபது வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்து, அங்கேயே சக கைதிகளால் தாக்கப்பட்டு இறந்த சரப்ஜித் சிங்-கின் வாழ்க்கையைத்தான் படமாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தினைப் பற்றி தயாரிப்பாளர் கூறுகையில், “ சிறையில் இருக்கும் குற்றவாளி பற்றிய கதை மட்டுமல்ல. தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படும் ஒருவனால், அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு.  ஒரு குடும்பத்தின் சீரழிவு, பிரச்னையில் சிக்கும் குற்றவாளியின் சகோதரி, அவரை மீட்கப் போராடும் கதை. இந்தப் படம் நிச்சயம் சிறைக்கைதிகளுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

உண்மையான சரப்ஜித், பாகிஸ்தான் சிறையில் இறந்தபிறகு, அவரது சகோதரி இதே திகார் ஜெயிலில், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு வாடும் பாகிஸ்தானியர்களுக்காக போராடி அவர்களில் சிலரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதால் சிறைக்கைதிகள் மத்தியில் இந்தப் படம் பரவலாகப் பேசப்படும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!