தயாராகிறது நாயக் - 2

 

இயக்குநர் ஷங்கர் அவர்களின் "முதல்வன்" திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் குறைவு. இப்பொழுது ரிலீஸ் ஆவதாக இருந்தால் அரசாங்கம் தடை விதிக்கக்கூடிய அளவுக்கு, அரசியல் கதைக்களம்.  ஹிந்தியில் "நாயக்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, பாலிவுட் ரசிகர்களையும் ஈர்த்து பெரிய பாராட்டை பெற்றது இப்படம்.

15 வருடங்களுக்கு பிறகு, நாயக் திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஒரு கதையை அமைக்கவுள்ளார் தயாரிப்பாளர் தீபக் முகுத். இராஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். பஜ்ரங்கி பைஜான், பாகுபலி படங்களுக்கு கதை எழுதிய திரு K.V. விஜயேந்திர பிரசாத் அவர்கள் இப்படத்திற்க்கான கதையை எழுதுவார் என தெரிகிறது.

இதற்கான காப்புரிமையை ஏ.எம். ரத்தினம் அவர்களிடமிருந்து பெற்றுள்ளதாக கூறிய தீபக், அரசியல், காதல் கலந்த கதைக்களம் அமைக்கவிருப்பதாகவும், கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் அப்படியே இருக்குமெனவும் கூறினார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைக்கப்படவுள்ள இந்த படத்தின் கதை முற்றிலும் வேறானாலும், முன்பாகத்தின் கம்பீரத்தை இதிலும் கொடுக்க முயலப்போவதாகக் கூறியுள்ளார்.

நாயக் திரைப்படத்திற்கு இருக்கும் மவுசு மிகவும் பெரிது, அதிகமாக தொலைக்காட்சியில் திரையிடப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. நாயக் 2 திரைப்படம் அந்த மவுசை காப்பாற்றுமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும். பயோபிக் சீஸன் போல, இந்தப் படம் ஹிட்டானால் சீக்வெல்களின் சீசனும் ஆரம்பிக்கலாம்!

அப்படியே தமிழுக்கும் ஒரு முதல்வன்-2 பார்சல்!!!!!

பா. அபிரக்ஷன் (மாணவப் பத்திரிக்கையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!