ஒரே நாளில் வைரலான ராதிகா ஆப்தேவின் குறும்படம் #Kriti

குறும்படங்களுக்கு பாலிவுட்டில் சினிமாவுக்கு நிகரான இடம் கொடுக்கப்படுகிறது.  நல்ல கதையம்சம் உள்ள குறும்படங்கள் என்றால் அதன் உருவாக்கத்தில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

நேற்றைக்கு ரிலீஸாகி ஒரே நாளில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது, கீழே உள்ள Kriti என்கிற குறும்படம். சிரீஷ் குந்தர் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் கதை, ஓரளவு யூகிக்கக் கூடியது என்றாலும் மனோஜ் பாஜ்பாய், ராதிகா ஆப்தே இருவருமே நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள்.

கடைசி காட்சியில் மனோஜ் பாஜ்பாயைக் காட்டும்போது.. அவர் தலைமேல் கவனியுங்கள்.

ஏற்கனவே, ராதிகா ஆப்தே நடித்த  அகல்யாவும் வைரல் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!