இந்த உடைக்கு என்ன குறை? அதிருப்தியில் முடிந்த ஃபேஷன் ஷோ!

 
 
 
வாரா வாரம் வெள்ளிக்கிழமை ஆனால் பாலிவுட்டில் எதாவது ஒரு ஃபேஷன் ஷோ கலைகட்ட ஆரம்பித்துவிடுவது வழக்கம். எதையாவது கிளப்பிவிட்டு, ரசிகர்களின் 'ஹாட்பீட்டை' எகிற வைப்பது முதல் சர்ச்சையில் சிக்குவது வரை பல சம்பவங்களையும் நடத்திவிட்டுப் போவது ஷோக்களின் வழக்கம். இந்த வாரமும் அப்படி ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது IIFA ஃபேஷன் ஷோ. 
 
ஸ்பெயின் தலைநகர், மேட்ரிட்டில் (Madrid) -  IIFA, நேற்று நடந்த ஃபேஷன் ஷோவில், சோனாக்‌ஷி சின்ஹா, பிபாசா பாசு, ரிச்சா சாடா போன்ற பாலிவுட் திரையுலகத்தைச்  சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.  ஆனால், சிலருக்கு என்ன மாதிரி உடை அணிய வேண்டும், இந்த உடை தனக்குப்  பொருத்தமானதா என எதையும் பார்க்காமல் ஷோவில் நடைபோட்டது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
  
இதற்கு முன்பு,  IIFA நடத்திய ஒரு ஃபேஷன் ஷோவில், தனக்குப்  பொருத்தமில்லாத ஆடையை அணிந்து வந்தார் சோனாக்‌ஷி . அந்த ஷோவில், 'தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள சோனாக்‌ஷி இது போன்று ஆடைகளை எப்படி தேர்ந்தெடுத்தார்' என பல ரசிகர்களும் கேட்டிருந்தனர். தன்னைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே இது போன்ற ஆடைகளை விழாக்களுக்கு அணிகிறார்களோ எனவும் சமூக வலைத்தளங்களில் 'கமெண்ட்' பதிவிட்டிருந்தனர்.
 
கிட்டத்தட்ட ஐஸ்வர்யா ராய் லிஃப்ஸ்டிக் அணிந்து வந்தபோது ஏற்பட்ட சர்ச்சை  போலத்தான் ஒவ்வொரு விழாக்களிலும் பாலிவுட் நடிகைகள் மேல் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதற்கு மாறாக, நடிகர்கள் தாங்கள் அணிந்து வந்த காஸ்டியூம்களுக்கு 'லைக்ஸ்' அள்ளியிருக்கிறார்கள் என்பது சந்தோஷ செய்தி. 
 
தனக்கு பொருத்தமே இல்லாத ஆடைகளை அணிந்து நடைபோட்ட பிரபலங்களின் படங்களைப் பார்த்தால்,  'என்னமா இதெல்லாம் நல்ல டிரெஸ் இல்லையாமா.? என கேட்க தோன்றுகிறது!  
 
ம்.. நீங்களும் பாருங்க...
 
-வே.கிருஷ்ணவேணி

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!