இதனால்தான் கரீனா கபூர் நடிக்காமல் இருக்கிறாரா..?

 
 
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கக்கூடிய மோஸ்ட் வான்டட் ஹீரோயின் கரீனா கபூர். பாலிவுட் ஹீரோயின்களில் அதிகளவு சம்பளம் வாங்குபவரும் இவர்தான்.  தற்போது திடீரென படம் நடிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் கரினாவின் கணவர் சாயிஃப் அலி கான். 'என் மனைவில் கர்ப்பம் தரித்துள்ளார்... வரும் டிசம்பர் மாதத்தில் எங்கள் முதல் குழந்தைக்காகக்  காத்திருக்கிறோம். எங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மீடியாக்களுக்கு எங்களுடைய நன்றி' என கரீனாவின் சினிமா வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்தார். 
 
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் 'Veere Di Wedding' படத்தில் கரீனா கபூர் தொடர்ந்து நடிப்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்குப்  பதிலளித்துள்ள கரீனா, 'இந்தப் படத்திற்கான அனைத்து போர்ஷன்களையும் வரும் அக்டோபருக்குள் முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன். அதற்குப் பிறகு பிரசவத்திற்கான ஓய்வில் செல்கிறேன்.  டெலிவரி ஆன மூன்று மாதத்திற்குப் பிறகு மீண்டும் நடிப்பைத் தொடருவேன்' எனவும் கூறியுள்ளார். 
 
- வே. கிருஷ்ணவேணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!