முன்னாடி இருந்த ஸ்பீட் இப்போ இல்லல்ல..! - ஏ.ஆர்.ரஹ்மான்

 
 
தொடக்க காலத்தில் ரசிகர்களைக் கவர்ந்து அவர்களின் மனதில் எப்போதும் அலையடிக்கும் இசைப் பாடல்களைக் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இப்போதெல்லாம் முன்பு போல இசையை என்னால் ரசிகர்களுக்கு வழங்க இயலவில்லை என்று கூறியுள்ளார்.

மும்பையில் நேற்று(செவ்வாய்) நடந்த 'மொகஞ்சதாரோ' என்ற புதிய படத்தின் அறிமுக விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் மொகஞ்சதாரோ படத்தின் இயக்குநர் அஷூதோஷ் கோவரிக்கரைப் பற்றி பேசிய அப்படத்தின் இசையமைப்பாளார் ஏ.ஆர். ரஹ்மான்,

''அஷூதோஷ் என்னை இந்த படத்திற்கு இசையமைக்க அணுகியபோது ஏதோ வரலாறு சார்ந்த ஆவணப்படமாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். பிறகு, அந்தப்படம் பற்றி விளக்கியப் பிறகு சிலிர்த்துப் போனேன். இந்தப் படத்திற்கு இசையமைக்கும்போது அந்தக்  களத்தில் இருப்பது போல கற்பனை செய்து கொண்டேன். அங்கே நான் இருந்தது போலவே உணர்ந்து இசையமைத்தேன். " என்றார்.

விழாவில், ரஹ்மானிடம் மொகஞ்சதாரோ பட இயக்குனர் அஷூதோஷ், 'இந்தியப்படங்கள், தென்னிந்தியப் படங்கள், மேற்கத்தியப் படங்கள் என எப்படி அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உங்களால் இசையமைக்க  முடிகிறது என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ரஹ்மான், 'ஒவ்வொரு மனிதருக்குள்ளும் காதல், கோபம், சோகம், கனவு என எல்லா உணர்வுகளும் இருக்கும். முன்பெல்லாம்  இதுபோன்ற உணர்வுகளை எனக்குள் கொண்டுவந்து,அவற்றை என்னுடைய இசையாகப் பிரதிபலிப்பேன். அதுபலரின் மனதையும் கவர்ந்தது. இப்போது எனக்கு வயதாகிவிட்டது. இது போன்ற இசையை என்னால் இனி கொடுக்கமுடியுமா என்று தெரியவில்லை' என்றார்.  

 

Save

Do you like the story?

Please Appreciate the Author by clapping!