கமலஹாசன் படத்தில் நடிச்ச குழந்தையா இது!

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்  கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன்
மணிவண்ணன், நாசர் என பெரிய பட்டாளமே நடித்திருந்த அவ்வை சண்முகி 1996 ம் ஆண்டு வெளிவந்தது.
 
இந்தப் படம் ஹிந்தியில் 1997 ல் டப் செய்யப்பட்டது. ஹிந்தியில் சாச்சி- 420 எனும் பெயரில் வெளியானது.அதில்  குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அமீர் கானின் மகள் பாத்திமா ஸானா சையிக். 
 
சாச்சி-420 படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பாத்திமா ஸானா சையிக், 15 வருடங்களுக்குப் பிறகு இப்போது அமீர்கான் நடிக்கும் 'டன்கல்' திரைபடத்தில் அவருக்கு மகளாக நடிக்கவிருக்கிறார். மல்யுத்த வீரரான கீத்தா போகத் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த கதாப்பாத்திரத்திற்காக தனது நீளமான முடியை வெட்டியதோடு, உடல் எடையைக்  குறைத்து ஒல்லியாகியும் உள்ளார். சமீபத்தில் அவருடைய புகைப்படங்களை அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!