பெண்களை மதித்தால் நாடு உயரும்! ஷாரூக்கான் நெகிழ்ச்சி

 

சமீபத்தில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று(புதன்) ஹைதராபாத்தில் நடைபெற்ற 'Ace Against Odds' என்ற சுய சரிதை புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருதினராக ஷாரூக்கான் அழைக்கப்பட்டிருந்தார். 
 
புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய ஷாரூக்கான்,
 
''எவ்வளவு அதிகமாக பெண்களுக்கு மதிப்பு தருகிறோமோ அந்த அளவுக்கு நாடு முன்னேற்றம் அடையும். மேரிகோம், பி.டி.உஷா, சானியா மிர்சா போன்ற பெண்கள் நமது நாட்டின் மிகப்பெரும் சொத்து. இவர்கள், விளையாட்டுத் துறைக்கு அளப்பரிய பங்களிப்பைத் தந்துள்ளனர். மற்ற பெண்களும், இவர்களை முன் உதாரணமாக வைத்து முன்னேற தொடங்கியுள்ளனர். சானியா மிர்சா 'டென்னிஸ் ராணி' என்று அழைக்க தகுதியானவர்' என்று கூறினார்.
 
ஷாரூக்கானை அடுத்து பேசிய சானியா மிர்சா, ''என்னுடைய சுய சரிதை புத்தகத்தை வெளியிட வரமுடியுமா என்று போனில் தொடர்புகொண்டுதான் கேட்டேன். உடனே வருவதாக உறுதியளித்தார். இதோ இப்போது வந்துவிட்டார். இதைவிட பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும். இந்த சுய சரிதை புத்தகத்தில் டென்னிஸ் வாழ்க்கையில்  நான் பட்ட கஷ்டங்கள், உலக மகளிர் இரட்டையர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடம் பிடித்தது எப்படி என்பது போன்ற தகவல்கள் கூறப்பட்டுள்ளன. முன்னணி புத்தக கடைகளில் இப்புத்தகம் விற்பனைக்கு கிடைக்கும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!