கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா! சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார் நடிகை கரீனா!

தனது வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தை ஆண் குழந்தை என்றும் அதனைப் பரிசோதித்து கரீனா கபூர் தெரிந்துகொண்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
 
இந்நிலையில்,வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் 'Veere Di Wedding' படத்தில் கரீனா கபூர் தொடர்ந்து நடிப்பாரா என்கிற சந்தேகத்திற்கு சமீபத்தில்தான் முற்றுப் புள்ளி வைத்தார். பிரசவத்திற்கான ஓய்வில் செல்கிறேன். டெலிவரி ஆன மூன்று மாதத்திற்குப் பிறகு மீண்டும் நடிப்பைத் தொடருவேன்' எனவும் கூறியவருக்கு மீண்டும் ஒரு பிரச்னை எழுந்துள்ளது. கணவன், மனைவி இருவரும் லண்டனில் இருந்தபோது, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பரிசோதித்துப் பார்த்ததாகவும், அந்த பரிசோதனையில் அவருடைய வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இது மிகப்பெரும் சர்ச்சையை ஹிந்தி திரையுலகில் உண்டாக்கியிருந்தது.
 
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதித்து மருத்துவர்கள் சொல்வது சட்டப்படி குற்றமாகும். இதனால் பரவிவரும்  இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கரீனா. இது தொடர்பாக அவரின் செய்தித் தொடர்பாளர், 'இந்த செய்தி வதந்தியே. இது பொய்யான செய்தி. எந்த மருத்துவர்களிடமும் இதுகுறித்து கரீனா, சையிப் இருவரும் பேசியதில்லை. பரிசோத்துப் பார்க்கவும் இல்லை. இது கற்பனை செய்தி. இதைப்  பெரிதுப் படுத்தாதீர்கள்' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!