ரஜினியுடன் போட்டியா..? அதற்கு நான் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்! - நடிகர் இர்ஃபான்கான் | Need to take another birth compete with rajinikanth Irrfan Khan

வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (18/07/2016)

கடைசி தொடர்பு:10:18 (18/07/2016)

ரஜினியுடன் போட்டியா..? அதற்கு நான் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்! - நடிகர் இர்ஃபான்கான்

நடிகர் ரஜினிகாந்துடன் போட்டியா..? அதற்கு நான் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் என்று இந்தி நடிகர் இர்ஃபான்கான் கூறி உள்ளார்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம்வருகின்ற 22-ம் தேதி வெளியாகிறது. அதே நாளில், இந்தி நடிகர் இர்ஃபான்கான் நடித்த ‘மதாரி’ என்ற இந்தி திரைப்படமும் வெளியாகிறது.

‘மதாரி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி, குழந்தைகளுக்காக மும்பையில் நேற்று திரையிடப்பட்டது. அதில் கலந்து கொண்ட நடிகர் இர்ஃபான்கானிடம், ‘கபாலி’யுடன் அவரது படம் மோதுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த இர்ஃபான்கான், ''இது மோதல் அல்ல. ரஜினிகாந்த் ஒரு பெரிய மனிதர். உலகம் முழுவதும் தெரிந்த பெரிய நடிகர். அவருக்கு நான் சமம் அல்ல. அவர் படத்துடன் என் படம் வெளியாவதே எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

நாங்கள் போட்ட பணத்தைவிட கொஞ்சம் அதிகம் வசூல் கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம். ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன் போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close